உம்மையல்லால் உம்மையல்லால்
சார்ந்திட எமக்கு யாருமில்லை
ஞானம் நீரே நீதி நீரே
பரிசுத்தமும் மீட்பும் நீரே
1. நல்ல மேய்ப்பனாக வந்தீர்
ஜீவனீந்தீர் மீட்டு கொண்டீர்
உந்தன் சத்தம் கேட்டு நாங்கள்
உமது பின்னே ஏகுவோம்
2. திராட்சைக் செடி நீர் கொடிகள் நாங்கள்
பிதா தான் நமது தோட்டக்காரர்
அதிக கனிகள் கொடுத்து மகிழ
உம்மில் நிலைத்து ஜீவிப்போம்
3. நித்திய ஜீவ வசனங்கள்
உம்மிலே யாம் கேட்கின்றோம்
உம்மை விட்டு பிரிந்து நாங்கள்
எங்கு சென்று ஜீவிப்போம்
HOME
More Songs